தரவரிசைப் பட்டியல்! சாதனை படைத்த டிவில்லியர்ஸ், பின்தங்கிய டோனி

Written by vinni   // October 28, 2013   //

icc_logoடெஸ்ட் போட்டியில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) துபாயில் நேற்று வெளியிட்டது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 909 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இதன்மூலம் 900 அல்லது அதற்கு மேல் புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த 28வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

முதலிடத்தில் இருந்த மற்றொரு தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, 898 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மூன்றாவது இடத்தில் மேற்கிந்திய தீவுகளின் சந்தர்பால் உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்த தென் ஆப்ரிக்க அணித்தலைவர் ஸ்மித், ஏழு இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்தார்.

ஒரு இடம் முன்னேறிய பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா, 6வது இடத்தை கைப்பற்றினார்.

இந்தியாவின் புஜாரா 8வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார்.

ஒரு இடம் பின்தங்கிய இந்திய அணியின் அணித்தலைவர் டோனி, 20வது இடத்தை மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்லுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், பிலாண்டர் மற்றும் இலங்கையின் ஹெராத் ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இரண்டு இடங்கள் முன்னேறிய மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜா 11வது இடம் பிடித்தார்.

மேலும் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் 16வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.


Similar posts

Comments are closed.