ஒட்டுக்கேட்கும் விவகாரம் ஒபாமாவுக்கு தெரியாது: புலனாய்வுப் பிரிவு

Written by vinni   // October 28, 2013   //

barack-obama-e10dcc69da3adc1dதொலைபேசி ஒட்டுக் கேட்டல் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு தெரியாது என அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சி(என்எஸ்ஏ) பல்வேறு நாடுகளின் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பதாக அதன் முன்னாள் அதிகாரி ஸ்நோடென் அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில் ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை என்எஸ்ஏ ஒட்டு கேட்டதாக ஸ்நோடென் தகவல் வெளியிட்டார்.

இதனால் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏஞ்சலாவின் உரையாடல்களை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து அமெரிக்கா ஒட்டு கேட்கிறது என்றும், இந்த விவகாரம் ஜனாதிபதி ஒபாமாவுக்கு தெரியும் என்றும் ஜேர்மனி பத்திரிகை கூறியிருந்தது.

இதுகுறித்து என்எஸ்ஏ செய்தி தொடர்பாளர் வான்னி வின்ஸ் கூறுகையில், ஜேர்மனியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கடந்த 2002ம் ஆண்டு முதலே ஐரோப்பிய நாடுகளின் எலக்ட்ரானிக் ஊடகங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 2010 முதல் ஜேர்மனியும் கண்காணிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமாவுக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது.

பிரதமர் ஏஞ்சலாவின் டெலிபோன் உரையாடலை ஒட்டு கேட்க அவர் உத்தரவிடவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.