தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்

Written by vinni   // October 28, 2013   //

arrestகேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ளது கொடுவாயூர். இங்குள்ள மயிலாடு நாலுசென்டு காலனியைச் சேர்ந்த தொழிலாளி கங்காதரன் நாயர்(வயது 59).
இவரது மகன் வினோத்குமார்(24). எந்த வேலைக்கும் செல்லாத வினோத்குமார் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போடுவார். வழக்கம் போல் நேற்று மாலை 5 மணி அளவில் தனது தந்தையுடன் தகராறு செய்தார். அப்போது கங்காதரன் நாயர் மகனை வாய்க்குவந்தபடி திட்டியதாக தெரிகிறது.

இதனால் வினோத்குமார் ஆத்திரமடைந்து வீட்டில் கிடந்த கம்பியை எடுத்து கங்காதரன் நாயரின் தலையில் தாக்கினார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த கங்காதரன் நாயர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குழல்மன்னம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அரிதாஸ் தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கங்காதரன் நாயரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தையை அடித்துக் கொன்ற வினோத்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


Similar posts

Comments are closed.