குடாநாட்டை முற்றுகையிடும் தெற்கு வியாபாரிகள்

Written by vinni   // October 28, 2013   //

Northern_Province-298x212தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென்பகுதியிலிருந்து நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டை முற்றுகையிட்டு வருகின்றனர்.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இந்த நிலையில், பண்டிகை வியாபாரத்தைக் குறிவைத்து தென்பகுதி நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டுக்கு அதிகளவில் வருகின்றனர். முற்றவெளி பிரதேசத்தில் இதற்கென அவர்கள் தனியாக கொட்டகை போட்டு வியாபாரப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாகவுள்ள பகுதி மற்றும் முனீஸ்வரன் வீதி, புல்லுக்குளம் வீதி போன்றவை தீபாவளி பண்டிகைக்காக நடைபாதை வியாபாரத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைவிட நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டில் கிராமப் புறங்களுக்குச் சென்று அங்கும் உடு புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடைபாதை வியாபாரிகளின் இத்தகைய வியாபார நடவடிக்கையால் நகர்ப்புற புடைவை வர்த்தக நிலையங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புடைவை உரிமையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.