பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்போம்: விக்ரமபாகு கருணாரட்ன

Written by vinni   // October 28, 2013   //

commanகொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் 54 நாடுகள் கலந்து கொள்ளும், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை தமது கட்சி புறக்கணிக்கும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

ஆனால் மாநாடு நடைபெறும் காலத்தில் மாற்று வழிகள் ஊடாக அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அதேவேளை பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தாலும் விடுக்கா விட்டாலும் அதில் பங்கேற்க போவதில்லை என ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துவிட்டது.

ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் முன்னர் தமக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.