உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துபாயில் நேற்று திறக்கப்பட்டது

Written by vinni   // October 28, 2013   //

download (4)பிரபல சுற்றுலா நகரமாக திகழும் துபாயில் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் 2010 ஜுன் மாதத்தில் இருந்து சரக்கு போக்குவரத்து மட்டுமே கையாளப்பட்டு வந்தது.

இங்கிருந்து 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பழைய விமான நிலையத்தை கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 5 3/4 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத அல் மக்தூம் விமான நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கியது.

பணிகள் நிறைவடைந்த பின்னர் 5 ஓடுபாதைகள் கொண்ட இந்த புதிய விமான நிலையம் ஆண்டுக்கு 16 கோடி பயணிகளையும் 1.2 கோடி டன் சரக்குகளையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.