4 குழந்தைகளுடன் தாயும் கொடூரமான முறையில் குத்திக் கொலை

Written by vinni   // October 28, 2013   //

cba19ca1-3c94-4d3d-9356-f39c20f701c9_S_secvpfநியூ யார்க்கில் உள்ள புரூக்ளின் சன்செட் பார்க் பகுதியில் கியாவோ சென் லி (37) என்ற பெண் தனது குழந்தைகள் லிண்டா சுவோ (9), அமி சுவோ (7), கெவின் சுவோ (5), வில்லியம் சுவோ (1), ஆகியோருடன் வசித்து வந்தார்.

கியாவோ சென் லி-யின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாக புரூக்ளின் நகர ரோந்து போலீசாருக்கு அவசர அழைப்பு வந்தது. இதனையடுத்து, அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

உடல் முழுக்க கத்திக்குத்து காயங்களுடன் 3 குழந்தைகள் பிணமாக கிடந்தன. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கியாவோ சென் லி மற்றும் இன்னொரு குழந்தையை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அந்த வீட்டின் சமையல் அறையில் பதுங்கியிருந்த உறவினர் மிங் டாங் சென் (25) என்பவனை கைது செய்த போலீசார் அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநோயாளி போல் காணப்படும் இவன்தான் இந்த படுகொலைகளை செய்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

1 முதல் 9 வயதிலான 4 குழந்தைகளுடன் தாயும் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.