அமெரிக்காவினால் பாகிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதலை சினிமா படமாக்கிய இம்ரான்கான் மனைவி

Written by vinni   // October 28, 2013   //

01-1375347501-jemima-khan1-600பாகிஸ்தானில் மலைப் பகுதியில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உளவுத்துறை டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதில் தீவிரவாதிகளுடன் அப்பாவி பொது மக்களும், குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர்.

இதற்கு பாகிஸ்தான் மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம் பியுள்ளது. இந்த தாக்குதலை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் நவாஸ்செரீப், எதிர்க்கட்சி தலைவர் இம்ரான்கான் உள்ளிட்டோரும் இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.

ஆனால் இத்தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமே கொல்லப்படுகின்றனர். அப்பாவி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா மறுத்து வருகிறது. இதை பொய்யாக்கும் வகையில் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இ–இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெமீமா ஒரு ஆவண சினிமா படம் தயாரித்துள்ளார்.

அப்படம் நாளை மறு தினம் (30–ந்தேதி) இஸ்லாமாபாத்தில் பொதுமக்கள் மத்தியில் திரையிடப்படுகிறது. அப்படத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீச்சு நடத்திய முன்னாள் ஆபரேட்டர் பிரான்டன் பிரையந்த், தாய் மற்றும் குழந்தைகளை இழந்த பள்ளி ஆசிரியர் ரபியுர் ரஹ்மான் ஆகியோரது பேட்டிகள் மற்றும் அனுபவங்கள் இடம் பெற்றுள்ளன.

இவை தவிர ‘டிரோன்’ தாக்குதலில் பலியான 16 வயது சிறுவன் தரிக் அஷிஷின் கண்ணீர் கதையும் இடம் பெற்றுள்ளது.

இந்த சினிமா படத்தை இம்ரான்கானும் பார்க்கிறார். இப்படத்தை பார்த்த பிறகு மக்களின் மனநிலை மேலும் மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.