தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Written by vinni   // October 27, 2013   //

guஇலங்கைக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்புகளுக்கு அரசாங்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புகள் தொடர்பில் அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை.

அத்துடன் இந்திய பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாதது பெரிய பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்தாது என்றார்.

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி அண்மையில் சென்னையில் உள்ள பிரித்தானிய தூதரகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் தமிழக சட்டச் சபையியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே குணதாச அமரசேகர இந்த கருத்துக்களை வெளியிட்டார்.


Similar posts

Comments are closed.