நடுவரை வெறுப்பேற்றிய அஜ்மலுக்கு எச்சரிக்கை

Written by vinni   // October 27, 2013   //

umar_akmal_001விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர் அஜ்மலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துபாயில் பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இதன் மூன்றாவது நாளில் பாகிஸ்தான் சுழல் சயீத் அஜ்மல் வீசிய 162வது ஓவரை, தென் ஆப்ரிக்க அணியின் மார்னி மார்க்கெல் எதிர்கொண்டார்.

இதில் பந்து கேட்ச் ஆனதாக அஜ்மல் செய்த முறையீட்டை நடுவர் இயான் கவுல்ட் நிராகரித்தார்.

ஆனால் அடுத்த பந்திலேயே மார்க்கெல் முதல் ஸ்லிப்பில் யூனிஸ் கானிடம் பிடிபட்டு ஆட்டமிழந்தார்.

நடுவர் அவுட் கொடுத்த பிறகும் அஜ்மல் நீண்ட நேரம் அவுட் கேட்டு வேண்டுமென்றே வெறுப்பேற்றும் வகையில் செயல்பட்டார்.

இதையடுத்து ஐசிசி விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட அஜ்மலை போட்டி நடுவர் டேவிட் பூன் கடுமையாக எச்சரித்தார்.


Similar posts

Comments are closed.