கிளீன் போல்டான சச்சின்

Written by vinni   // October 27, 2013   //

sachinரஞ்சி கிண்ண போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் 5 ஓட்டங்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.
ஹரியானாவின் ரோடக்கில் நடந்த ரஞ்சி கிண்ண போட்டியில் இன்று மும்பை- ஹரியானா அணிகள் மோதின.

மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார்.

இவரது தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதால், இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது, இதனையடுத்து களமிறங்கிய ஹரியானா அணி 134 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக சர்மா 49 ஓட்டங்களும், கோட் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை அணியின் தொடக்க வீரர் ஜாபர் 14 ஓட்டங்களிலும், பவார் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனைதொடர்ந்து களமிறங்கிய சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோகித் சர்மா பந்தில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.


Similar posts

Comments are closed.