கலால் தீர்வை அதிகாரிகள் எனக் கூறி கொள்ளையிட்ட இருவர் விளக்கமறியலில்

Written by vinni   // October 27, 2013   //

jailகலால் தீர்வை அதிகாரிகள் எனக் கூறி, மக்களை சிரமத்துக்குள்ளாக்கி பணம், பொருட்களை கொள்ளையிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவன்கொட – யாகொடமுல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் (25) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் வசமிருந்து 10,330 ரூபா பணம், பெண்ணொருவரின் கைப்பை, கையடக்கத் தொலைபேசிகள் எட்டு, இரண்டு கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவர்கள் ஜஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதோடு, நேற்றையதினம் மினுவன்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனையடுத்து எதிர்வரும் 6ம் திகதிவரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.