வடக்கு முதல்வருடன் தூதுவர்கள் சந்திப்பு!

Written by vinni   // October 27, 2013   //

vikவடக்கு மாகாணசபைக்கான அங்கீகாரமொன்றை வழங்க சர்வதேச சமூகம் தயாராகிவருகின்றது. அவ்வகையினில் தொடர்ச்சியாக வடக்குக்கு வருகை தரவுள்ள அமெரிக்கத் தூதுவர், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர், கொரியத் தூதுவர் ஆகியோர் என பலரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அறிவித்துள்ளனர். அடுத்தவாரம் நடுப் பகுதியிலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே.சிசன் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மாதம் 30 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரைம் அவர் சந்திக்கவுள்ளார். அதேபோன்று கொரியத் தூதுவரும் வடக்கு முதலமைச்சரை அன்றைய தினமே சந்திக்கவுள்ளார். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டேவிட் டாலீயும் வடக்குக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சரை அவர் சந்திக்கவுள்ளனர்.


Similar posts

Comments are closed.