இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் குண்டுகள் வெடிக்கின்றன: ஜனாதிபதி

Written by vinni   // October 27, 2013   //

art.mahinda.rajapaksa.afp_.gi_யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் நாடு அபிவிருத்தி பாதையில் துரிதமாக பயணித்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் முடிவடைந்து இலங்கையில் குண்டுகள் வெடிக்காவிட்டாலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் இன்னமும் குண்டுகள் வெடிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இன்று திறந்துவைத்துவிட்டு ஜா-எலவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,நமது நாட்டில் நீண்ட காலமாக உள்ள போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வாக இந்த கொழும்பு- கட்டுநாயக்க அதி வேக நெடுஞ்சாலை அமையும்.

சுமார் 60,70 ஆண்டுகளுக்கு முன்னர்; ஆரம்பித்த இந்த நெடுஞ்சாலையின் நிர்மாணப்பணி கடந்த 800 நாட்களில் நிறைவுசெய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இனி வரும் தேர்தல் பிரசாரங்களில் கல்வி அபிவிருத்தி, மின்சார அபிவிருத்தி, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருதல் மற்றும் அதி வேக நெடுஞ்சாலைகளை அமைப்போம் என மக்களிடம் தேர்தல் வாக்குறுதிகளை வழங்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறினார்.30,40 வருடங்களில் வரவுள்ள தொழில்நுட்பத்தை எமது நாட்டு மக்களுக்கு நடப்பாண்டிலேயே வழங்கியுள்ளோம், இவ்வாறாக அபிவிருத்தியை நோக்கி நம் நாடு செல்கையிலும், யுத்தம் முடிவடைந்து இலங்கையில் குண்டுகள் வெடிக்காவிட்டாலும் இலங்கைக்கு எதிராக இன்னமும் ஜெனிவாவில் குண்டுகள் வெடிக்கின்றன.

மேலும் இந்த அதி வேக நெடுஞ்சாலையை 800 நாட்களுக்குள் நிர்மாணித்துத் கொடுத்த சீன அரசிற்கும் சீன நிறுவனங்களுக்கும் எமது மக்கனின் சார்பில் நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தனது உரையின் போது கூறினார்.


Similar posts

Comments are closed.