நச்சுத் தன்மை வாய்ந்த சீனி! கனடியர்களுக்கு எச்சரிக்கை

Written by vinni   // October 27, 2013   //

sugar_make_001.w245நாம் அன்றாடம் பயன்படுத்தும் சீனி நச்சுத் தன்மை வாய்ந்தது என்ற போதிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் சீனி.

இது பல அபாயகரமான நோய்களுடன் தொடர்புகொண்டுள்ளது என பல ஆய்வுகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீரழிவு, புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

சீனியிலுள்ள நச்சுத் தன்மையானது கலோரிஸ் அதிகரிப்பு என்பதைத் தாண்டி மனித இனத்திற்குப் பாதகமான விளைவுகளைத் தருகின்றது என டாக்டர் றொபேட் லூஸ்ரிக் என்பவர் தெரிவித்துள்ளதாக தொலைக்காட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் கனடிய சுகாதாரத் துறையினர், கனடிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் யாவும் உணவுகள் தயாரிக்கின்ற போது எவ்வளவு சீனி அதில் சேர்க்கப்பட்டது என்பது கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய ஆய்வின் படி, சராசரியாக ஒவ்வொரு கனடியரும் 26 தேயிலைக்கரண்டி சீனியை ஒவ்வொரு நாளும் உட் கொள்கின்றார்கள் எனவும், அதன்படி ஒரு வருடத்திற்கு ஒருவர் 40 கிலோகிறாம் நிறையுள்ள சீனியை உட்கொள்கின்றார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தாங்கள் எடுத்துக் கொள்ளும் சீனியின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க அரசு நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.