மோடி பங்கேற்கும் 6 இடங்களில் குண்டுவெடிப்பு

Written by vinni   // October 27, 2013   //

Bomb-Blast-330x185பீகாரில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உரையாற்றவிருந்த பிரசார மேடை, ரயில்வே ஸ்டேஷன், மைதானம் என 6 இடங்களில் குண்டிவெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பாஜவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல்வேறு மாநிலங்களில் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், தமிழகம், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

இவர் செல்லும் இடமெல்லாம் பாஜக தொண்டர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருகின்றனர். மத்திய அரசுக்கு பெரும் சவால்கள் விட்டு வரும் மோடிக்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேலும் இவர் பங்கேற்கும் கூட்டங்களில் பொலிசார் முழு அளவில் 5 அடுக்கு பாதுகாப்பு செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மோடி பிரச்சாரம் செய்யவிருந்த 6 இடங்களில் குண்டிவெடித்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பாட்னாவில் மோடி முதல் பிரசாரத்தை துவக்கினார். இங்குள்ள காந்தி மைதானத்தில் பிரசாரம் துவங்கும் முன்னதாக காலை 9.50 மணியளவில் பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள பாத்ரூம் மற்றும் கழிப்பறையில் ஒரு குண்டு வெடித்தது.

இதில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பொலிசார், வெடிகுண்டு நிபுணர்கள் சில நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.

தொடர்ந்து மோடி மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக மேடை அருகிலும், மைதானத்திலும் சில குண்டு வெடிப்புகள் நடந்தன. மொத்தம் இதுவரை 6 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஒருவரை பொலிசார்கைது செய்துள்ளனர். இந்த சதி திட்டத்திற்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. வெடித்தது குறைந்த சக்தி கொண்டதாக தெரிகிறது. இதனால் பெரும் சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததை பொருட்படுத்தாத மோடி மற்றும் பாஜக நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடையில் தங்களின் பிரசார கூட்டத்தை துவக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார், பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் பீகாரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய அரசு முழு அறிக்கை கேட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு தேசி புலனாய்பவு படையினர் விரைந்துள்ளளனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.