நேற்றுதான் நான் வெங்காயமே சாப்பிட்டேன்: முதல்வர்

Written by vinni   // October 27, 2013   //

shella_dixit_001வெங்காய விலை உயர்வால் என்னுடைய குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளது காங்கிரஸ் கட்சியினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெங்காய விலை உயர்வால் தனது வீடும் பாதிக்கப்பட்டிருப்பதாக ஷீலா பேசியது காங்கிரஸ் கட்சியினரை நெளிய வைத்துள்ளது. அதேசமயம், ஷீலா பேச்சை வைத்து பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸை மேலும் வாரியுள்ளது.

டெல்லியில் தனது அதிகார்ப்பூர்வ இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்சித், கையில் வெங்காய விலை உயர்வால் தனது வீட்டு சமையலும் கூட பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல வாரங்களுக்குப் பிறகு இன்றுதான் அதாவது நேற்று வெங்காயம் சேர்த்த வெண்டைக்காய் பொரியலை சாப்பிட்டேன். வெங்காய விலையைக் குறைக்க எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆனால் வெங்காய விலை உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்றும் இருப்பினும் அடுத்த சில நாட்களில் விலை குறையும் என்று நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

ஷீலாவின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூத்த டெல்லி பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா கூறுகையில், அப்பட்டமாக பொய் சொல்கிறார் ஷீலா.டெல்லி மக்கள் தன் அரசு மீது கடும் கோபத்துடன் இருப்பது அவருக்குத் தெரியும்.

வெங்காய விலையால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இது காங்கிரஸை வரும் தேர்தலில் பாதிக்கும் என்பதால்தான் சென்டிமென்ட்டாக பேசி மக்களை ஆறுதல்படுத்த அவர் முயல்கிறார்.

மேலும் தனது அரசால் வெங்காய விலையைக் குறைக்க முடியாமல் போனதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதையே இது காட்டுகிறது.

ஒரு பொருளின் விலை உயர்ந்தால் அதை சாப்பிடக் கூடாது என்றும் மக்களுக்கு தவறான செய்தியை தனது பேச்சின் மூலம் கொடுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.