நாளை இங்கிலாந்தை 160 கி.மீட்டர் வேக கடும்புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Written by vinni   // October 27, 2013   //

download (3)இங்கிலாந்து நாட்டை நாளை (திங்கட்கிழமை) 160 கி.மீட்டர் வேகத்தில் கடும்புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மணிக்கு 100 மைல் (160 கி.மீட்டர்) வேகத்தில் தாக்கும் இந்த புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் சீற்றத்தின் பாதிப்பாக 30 முதல் 40 செண்டி மீட்டர் மழையும் பெய்யக்கூடும். இதன் விளைவாக பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

இதைப் போன்ற கடும்புயல்கள்1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்தை தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

நாளை இங்கிலாந்தை புயல் தாக்கும் போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உஷார் நிலையில் இருக்கும்படியும் பிரதான சாலைகளில் உள்ள பாலங்கள் திடீரென மூடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.