உலக நாடுகள் போலவே நாமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோம் -பிரசாத் காரியவசம்

Written by vinni   // October 27, 2013   //

srilankan-ambassador-to-Indiaஉலகில் உள்ள எல்லா நாடுகளையும் போலவே நாமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோம்

என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் மீறலினை ஒப்புக்கொண்டுள்ளார் . அதன்படி இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது . அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் , பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன . அதன்காரணத்தினால் சர்வதேச நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை .
 இருப்பினும் அமர்வுகளில் பங்கேற்க தவறும் நாடுகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக் கூடும் . அதற்கமைய இந்திய பிரதமர் மன்மோகன் இந்தியாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எனவும் ஆசியாவிற்கும் தலைவர் . அவர் இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு இந்திய தீர்மானங்களை எடுக்க வேண்டும் .
இதேவேளை , இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .


Similar posts

Comments are closed.