காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது : இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்க முடிவு

Written by vinni   // October 27, 2013   //

commenஇங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் காலனி நாடுகள் அடங் கிய அமைப்பு தான் ‘காமன்வெல்த்’.

1949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், சூடான், குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 53 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதன் தலைமையகம் லண்டனில் செயல்படுகிறது. காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இங்கிலாந்து ராணி 2–ம் எலிசபெத்தும், பொது செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மாவும் செயல்பட்டு வருகிறார்கள்.

நைஜீரியாவில் 1995–ல் கென்சரோ – விவா என்பவர் தூக்கில் போடப்பட்டதால் அந்த நாடு 1995–ல் இருந்து 1999–ம் ஆண்டு வரை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கிவிட்டது.

இதேபோல் பாகிஸ்தானில் அதிபர் பர்வேஸ் முஷ்ரப்பின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1999–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பாகிஸ்தான் சஸ்பெண்டு செய்யப்பட்டது.

அதன்பிறகு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை கண்டித்து அந்த நாடு மீண்டும் 2–வது முறையாக 2007–ம் ஆண்டு முதல் நீக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் அதிபர் முகாபே தேர்தல் மற்றும் நில சீர்திருத்தங்களில் மாற்றம் செய்ததால் அந்த நாடு 2003–ம் ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டது. காமன்வெல்த் நாடுகள் மீது இதுபோன்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததால் அந்த நாட்டையும் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் இலங்கையில் வருகிற டிசம்பர் 15–ந்தேதி காமன்வெல்த் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இதையடுத்து

இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் காலனி நாடுகள் அடங் கிய அமைப்பு தான் ‘காமன்வெல்த்’.

இதையடுத்து காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. என்றாலும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்தார்.

ஆனால் இந்தியாவில் இருந்து செல்லும் தூதுக் குழுவுக்கு தலைமை ஏற்பது யார்? என்பது அறிவிக்கப்படவில்லை. பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர்தான் தலைமை ஏற்கவேண்டும். அதுபற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சல்மான் குர்ஷித் பங்கேற்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக நேற்று அறிவித்தது. காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இதை காமன்வெல்த் மாநாட் டுக்கு எதிரான போராட்டமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.

இந்த முடிவுக்கு இலங்கை மந்திரி ஜான் சேனவிரத்னே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Similar posts

Comments are closed.