மீண்டும் சர்ச்சை:சந்தானம் மீது பாய்கிறது மகளிர் அணி

Written by vinni   // October 27, 2013   //

santhnam_002என்றென்றும் புன்னகை படத்தின் ஒரு காட்சியில் பெண் ஊழியர் ஒருவரை ‘நல்லாத்தானே இருக்க ஐநூரு ஆயிரத்துக்கே போயேன்’ என்று இரட்டை அர்த்தத்தில் நடிகர் சந்தானம் கமெண்ட் அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நேற்று முன்தினம் என்றென்றும் புன்னகை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற விளம்பரப் படப்பிடிப்புக் காட்சியில், சந்தானத்திடம் ஒரு பெண் வந்து ‘அஞ்சு பத்துக்குப் போகட்டுமா’ என்று அனுமதி கேட்கிறார்.

உடனே சந்தானம் டைமிங் என்ற பெயரில் ஏன்? நீ நல்லாத்தானே இருக்கிறே? ஆயிரம் ஐநூறுக்கே போலாமே! என்று கமெண்ட் அடிக்கிறார்.

இந்தக் காட்சி பெண்களை சிறுமைப்படுத்துவதாகவும், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தக் காட்சியை நீக்காவிட்டால் தணிக்கைச் சான்றிதழ் தரக்கூடாது என்று மகளிர் அணி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தணிக்கை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் அகமது தரப்பில் விசாரித்தபோது, அந்த கொமடி பகுதியை எழுதியவர் சந்தானம்தான். எனவே அவரைத்தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.