ராகுலை ‘இளவரசரே’ என்று கிண்டலடித்த மோடி

Written by vinni   // October 27, 2013   //

narendra_modi--26_moss_031713111857ஜான்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ராகுல் காந்தியை இளவரசரே என்று கிண்டலடித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நரேந்திர மோடி ஜான்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ஜான்ஸி ராணி பிறந்த மண்ணில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

பிறரை போல கண்ணீர் வடித்து பேச மாட்டேன், இந்த பகுதியில் நீர் ஆதாரம் இருந்தும் விவசாயிகள் முன்னேற முடியவில்லை. காரணம் டெல்லியில் உள்ளவர்கள் விவசாயிகள் குறித்து கவலை அடையவில்லை.

மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது. இதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ஏழை மக்களை சென்றடையவில்லை எனவும் கூறியுள்ளார்.

காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் உள்ளிட்ட கட்சியை வீட்டிற்கு அனுப்பும் நேரம் இது. காங்கிரஸ் 60 ஆண்டுகளாக இந்த நாட்டில் எதை சாதித்தார்கள்? 60 மாதம் கொடுங்கள் இந்த நாட்டை மாற்றி காட்டுகிறேன். 1984 ல் கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்களை ராகுல் காயப்படுத்துகிறார்.

முஷாபர்பூரில் கலவரம் நடந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயைத் தொடர்பு கொண்டதாக நமது உளவுத்துறை தகவல் கொடுத்தது என்று ராகுல் கூறுகிறார்.

ரகசியகாப்பு பிரமாணம் எடுக்காத ராகுலுக்கு முஷாபர் நகர் கலவரம் குறித்து உளவு துறை எப்படி தகவல் வழங்கியது? மேலும் ராகுலை குறிப்பிடும்போது இளவரசர் என்று மோடி பல முறை குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.