இத்தாலியின் எட்னா எரிமலை வெடித்து லாவா எனும் தீக்குழம்பை கக்குகிறது

Written by vinni   // October 27, 2013   //

national-park-mount-etna_30936_600x450ஐரோப்பாவின் உயரமான மலை என்றழைக்கப்படும் இத்தாலியின் எட்னா எரிமலை வாய் பிளந்து லாவா எனப்படும் தீக்குழம்பை கக்கியபடி உள்ளது.

 

எரிமலையின் உச்சியில் இருந்து கீழ்நோக்கி பாய்ந்தோடி வரும் தீக்குழம்பு பார்ப்பவர்களின் இதயத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

 

நேற்று முன்தினம் இப்பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கமே உறங்கிக் கொண்டிருந்த எட்னா எரிமலையை உசுப்பி விட்டுள்ளது என தெரியவந்துள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் தெற்கு இத்தாலியில் உள்ள சிசிலி தீவுப் பகுதிகளை சூழ்ந்துள்ளது.

 

இதனால் நேற்று சிசிலி வான்வழிப் பாதையில் விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை. எட்னா மலையோரத்தில் உள்ள கிராம மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக 1992-ம் ஆண்டு இந்த எரிமலை தீக்குழம்பை கக்கியது நினைவிருக்கலாம்.

 


Similar posts

Comments are closed.