பொதுநலவாய மாநாட்டுக்கு சனல் 4 தொலைக்காட்சிக்கு அனுமதி இல்லையா?

Written by vinni   // October 26, 2013   //

channel4_01கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெருமளவில் வெளியிட்டு முடிக்கப்பட்டுள்ளன.

எனினும் மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க கொழும்புக்கு வருவதற்கு விண்ணப்பித்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கமெரா கலைஞருக்கு மட்டுமே இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பபடவில்லை என‌ அந்த தொலைக்காட்சி தெரிவித்தது.

ஊடகங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்தின் டுவிட்டாரில் வழங்கியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோனத்தன் மில்லர், இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்று வினவியுள்ளார்.

தமது விண்ணப்பம் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஒரே பிரித்தானிய ஊடக வலையமைப்பு தமது வலைய‌மைப்பே என்று சனல் 4 தொலைக்காட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


Similar posts

Comments are closed.