இலங்கை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் மலேசியா பங்கேற்கக் கூடாது – மலேசிய ஜனநாயக செயற்பாட்டுக் கட்சி

Written by vinni   // October 26, 2013   //

commanஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் மலேசியா பங்கேற்கக் கூடாது என அந்நாட்டு எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு மலேசிய அரசாங்கம் அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென வலிறுத்தியுள்ளது.

மலேசியாவின் ஜனநாயக செயற்பாட்டுக் கட்சியே இந்த கோரிக்கையை விடுத்தள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

உரிய விசாரணை நடத்தப்படாமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் மலேசியா அரசாங்கம் அமர்வுகளை பகிஷ்கரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அமர்வுகளை புறக்கணிக்க வேண்டுமென கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.