டெல்லி மாநில சட்டசபைத் தேர்தல் : தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிட திட்டம்

Written by vinni   // October 26, 2013   //

vijiyakanthடெல்லி மாநில சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 4-ம்தேதி நடைபெற உள்ளது. இதில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி சென்றதும் விமான நிலையத்தில் விஜயகாந்த் அளித்த பேட்டி வருமாறு:-

டெல்லி சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. 10 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. தேர்தல் குறித்து தே.மு.தி.க பொதுக்குழு நாளை நடைபெறுகிறது. தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Similar posts

Comments are closed.