சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் மலேசியாவுடன் அவுஸ்திரேலியா உடன்படிக்கை

Written by vinni   // October 26, 2013   //

Australia-Malaysia-sign-food-trade-accordஅவுஸ்திரேலியா நோக்கி படகுப்பயணம் மேற்கொள்ளும் முகமாக மலேசியாவூடாக

இந்தோனேசியாவுக்கு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்துவதற்கு மலேசியாவுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது . கடந்த சில வருடங்களாக பல்லாயிரக்கணக்கானோர் படகுகளில் வந்தடைந்து ள்ளமை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பாரிய தலைவலியாக மாறி யுள்ளது . இந்நிலையில் அந்த அகதிகளில்
அரைப் பங்கிற்கும் அதிகமானோர் மலேசியாவினூடாக அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார் .
இதன் பிரகாரம் தான் இந்த வாரம் கோலாலம்பூர் நகருக்கு பயணத்தை மேற்கொண்டு சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் மலேசிய அதிகாரிகளுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அவர் கூறினார் .
மலேசியாவுடனான எமது கூட்டுறவை மீள ஊக்குவித்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் . அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களது வலைப்பின்னலில் பூகோள ரீதியான மோசமான இணைப்பாக மலேசியா உள்ளது என ஸ்கொட் தெரிவித்தார் .
மலேசிய கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு அல்லது தாய்லாந்து – மலேசிய எல்லைக்கு வருபவர்களை குறுக்கீடு செய்வது அல்லது சுமாத்ராவுக்கு வருபவர்களை தடுப்பது என்பன இந்தோனேசியாவிலிருந்து அவர்கள் படகுகளில் புறப்படுவதை தடுப்பதை விடவும் கஷ்டமானதாகவுள்ளது என அவர் கூறினார் .
மலேசியாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து அவர் விபரிக்காத போதும் ஆட்கடத்தல் தொடர்பில் இரு நாடுகளும் உடனடியாக இணைந்து செயற்படவுள்ளதாக குறிப்பிட்டார் .


Similar posts

Comments are closed.