வங்காள தேசத்தில் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் பலி

Written by vinni   // October 26, 2013   //

afp-photo_1373960003053-2-HDவங்காள தேசத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது நடுநிலையான காபந்து அரசு அமைக்க கோரி எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி (பி.என்.பி.) கோரிக்கை விடுத்துள்ளது.

அதை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.என்.பி. கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது. டாக்காவில் நடந்த பேரணியில் கட்சி தலைவர் கலீதா ஷியா உரையாற்றினார். பின்னர் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே, வங்காள தேசத்தில் பல இடங்களில் பேரணியில் பங்கேற்ற பி.என்.பி. கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது.

டாக்காவில் தெற்கு காஸ் பஜாரில் நடந்த கலவரத்தை அடக்க போலீசார் சுட்டதில் 2 பேர் பலியாகினர். சாந்த்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேரும் உயிரிழந்தனர்.

ஜல்தாகா நகரில் அதிரடி படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பி.என்.பி. கூட்டணி கட்சியான ஜமாத் இ–இஸ்லாமி கட்சியை சேர்ந்த ஒருவர் இறந்தார். இதற்கிடையே பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 300 பேர் காயம் அடைந்தனர்.


Similar posts

Comments are closed.