எதிர்காலத்தில் கூட்டமைப்பிலிருந்து ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக வருவார்

Written by vinni   // October 26, 2013   //

download (2)எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தே நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உருவாகுவார் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரை அந்த பதவபியில் இருந்து விரட்ட சிலர் முயற்சித்து வருகின்றனர்.

மேலும் சிலர் கட்சியின் தலைவரை பாதுகாக்க முயற்சித்து வருகின்றனர். எவர் அவரை விரட்ட முயன்றாலும் எவரை அவரை வைத்திருக்க முயன்றாலும் அந்த தலைவர் ஐந்து சதத்திற்கும் பிரயோசனமற்றவர்.

என்னை பொறுத்தவரையில் இன்னும் சில காலத்திற்கு எதிர்க்கட்சியில் சிறந்த தலைவர்கள் எவரும் உருவாக போவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் ஐக்கிய தேசிய்க்கட்சியிடம் இருந்த பறிபோகும் நிலைமை உருவாகியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக வரக்கூடும்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் சென்று எதிர்க்கட்சியை உருவாக்க ஏதேனும் வழிமுறையை கூறுங்கள் எனக் கோர நேரிடும் என்றார்.


Similar posts

Comments are closed.