அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது

Written by vinni   // October 26, 2013   //

obama-syriaமொராக்கோ நாட்டில் உள்ள கசபிளான்கா நகரை சேர்ந்தவர் சவுபியான் (வயது 18). அவர் டூவிட்டர் இணைய தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். அதில், உங்கள் (அமெரிக்கா) அதிபரையும், அவரை சார்ந்தவர்களையும் கொலை செய்வேன்.

அதற்காக அடுத்த மாதம் அமெரிக்கா வருகிறேன் என கூறி இருந்தார். அதை தொடர்ந்து கசபிளான்கா நகரில் நடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலிபர் சவுபியானுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.


Similar posts

Comments are closed.