நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாது: மோடி சூளுரை

Written by vinni   // October 26, 2013   //

Narendra-Modi_15பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறதென குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் கருத்து வெளியிட்டார்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாகவும் பதில் அளிக்காமல் அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டாமா? ஆனால், தங்களை இந்த நாட்டின் ராஜாக்களாகவும் இளவரசர்களாகவும் கருதிக் கொண்டிருப்பவர்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.

மக்களாகிய நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்யும் பொறுப்பை தந்தீர்கள். எங்களுக்கு 60 மாதங்களை தாருங்கள்.

ஒரு காலத்தில் ரெயில்களில் டீ விற்ற என்னை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

என்னை நீங்கள் பிரதமராக்க வேண்டாம். இந்த நாட்டின் காவல்காரனாக (வாட்ச் மேன்) மட்டும் நியமித்தால் போதும். உங்கள் காவல்காரனாக டெல்லியில் அமர்ந்து நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி நான் காவல் காப்பேன் என அவர் தெரிவித்தார்.

 


Similar posts

Comments are closed.