இன்று அதிகாலை ஜப்பானில் நில நடுக்கம்

Written by vinni   // October 26, 2013   //

earthquake_graphic_051709_xlargeஜப்பானில் கிழக்கு கடற்கரையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் சுனாமி (ராட்சத) அலைகள் ஏற்பட்டன. அவை வழக்கத்தை விட சுமார் 3 அடி உயரத்துக்கு சீற்றத்துடன் எழும்பி வந்து கரையில் சிறிதளவு தாக்கின.

அதை தொடர்ந்து ஜப்பானின் அவசர சேவை மையம் கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதிகாலை நேரத்திலும் வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இங்குதான் புகுஷிமா அணு உலை உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு பூகம்பமும், சுனாமியும் தாக்கியதில் அணு உலைகள் வெடித்து சேதம் அடைந்தன.

அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சினால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த முறை சுனாமி தாக்குதலின்போது புகுஷிமா அணுஉலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே ராட்சத அலைகள் குறைந்து விட்டதால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து புகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதித்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஜப்பானில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.


Similar posts

Comments are closed.