மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காது

Written by vinni   // October 26, 2013   //

flag2எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் கொழும்பு மாநாட்டில்  கம்பியா   என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய காலனித்துவ நாடுகள் வரிசையில் 54 வது நாடாக இருந்த மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா அந்த அமைப்பில் இருந்து இந்த மாதத்தில் விலகிக்கொண்டது.

இது தொடர்பில் கம்பியாவின் அரச தொலைக்காட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா இனி ஒருபோதும் பிரித்தானிய காலனித்துவ நாடுகளுடன் இணையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் கம்பியா 1965ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அணியில் இணைந்தது.

அதன்போது சேர் டௌடா ஜவாரா கம்பியாவின் ஜனாதிபதியாக இருந்தார்.

1994 ஜூலை 24ம் திகதி சேர் டௌஜா ஜவாராவின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமையைத் தொடர்ந்து கம்பியா 1995ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

இந்தநிலையிலேயே கம்பியா தமது சுய விலகலை அறிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.