பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேற்றம்

Written by vinni   // October 25, 2013   //

sainanew(1)பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் நேற்று விளையாடிய சாய்னா நேவால் தன்னை எதிர்த்து விளையாடிய கொரியாவின் பே இயோன் ஜுவிடம் 22- 20, 15-21, 20-22 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

மொத்தம் ஒரு மணி, 11 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில் மூன்றாவது சுற்றில் 19- 17 என்று தனக்குக் கிடைத்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற சாய்னா தவறிவிட்டார். அதேசமயம் தனக்குக் கிடைத்த 19- 20 என்ற புள்ளியில் தனக்கு சாதகமாகப் போட்டியைத் திருப்பிய ஜூ தொடர்ந்த இரண்டு புள்ளிகளில் சாய்னாவைத் தோற்கடித்தார்.

இந்தத் தோல்வியின் மூலம் நீண்ட காலம் கழித்து உலகத் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களிலிருந்து ஆறாவது இடத்திற்கு சாய்னா இறங்கியுள்ளார். 10-ம் நிலை வீரரான ஜுவிடம் சாய்னா தோற்பது இது நான்காவது முறையாகும்.

இதேபோல் 6-ம்நிலை வீராங்கனையான ஜி ஹியுன் சங்கைத் தோற்கடித்த பி.வி.சிந்து, நேற்று தன்னை எதிர்த்து விளையாடிய 30-ம் நிலையில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டு வீராங்கனையான கிர்ஸ்டி கில்மோரிடம் 21-10, 19-21, 16-21 என்ற கணக்கில் தோற்றுப் போனார்.

சிந்துவின் இந்த ஸ்திரமற்ற நிலை எப்போதும் தொடர்ந்து காணப்படுகின்றது. தற்போதுள்ள நிலையில் இந்திய வீரர்களில் எஞ்சியுள்ளது ஆனந்த் பவார் மட்டுமே ஆவார்.


Similar posts

Comments are closed.