ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடலாம் : கென்யா கிரிக்கெட் சங்கம் அழைப்பு

Written by vinni   // October 25, 2013   //

209a8275-826c-449c-bcb9-af25491da232_S_secvpf20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று தேர்வுகள் அடுத்த மாதம் ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் நடைபெற உள்ளன. நவம்பர் 15-ம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் 16 அணிகள் பங்கு கொள்ளும்.

இவற்றிலிருந்து தேர்வு செய்யப்படும் 6 அணிகளே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வங்காளதேசத்தில் நடைபெற உள்ள உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெறும்.

இந்த ஆண்டிற்கான சர்வதேசக் கோப்பை மற்றும் உலக கிரிக்கெட் லீக் தொடரில் ஏமாற்றத்தைப் பெற்ற கென்யா அடுத்த வருடத்திற்கான உலகத் தேர்வினுள் தகுதி பெறும் முனைப்புடன் உள்ளது.

இந்த அணியில் தலைவராகவும், துணைத் தலைவராகவும் விளையாடி வந்த ஸ்டீவ் டிக்காலோ (வயது 42) மற்றும் தாமஸ் ஒடாயோ (வயது 36) ஆகிய இருவரும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டனர். ஆயினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

அணியில் உள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்க ஒரு துடிப்பான தலைமை தேவை என்று எண்ணும் கென்யா கிரிக்கெட் சங்கம் இவர்கள் இருவரையும் மீண்டும் விளையாட அழைத்துள்ளது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றபோதிலும், நைரோபி கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் திறமையுடன் விளையாடி வருகின்றனர்.

எனவே, கென்யா அணியைத் தலைமை தாங்கவும், வழி நடத்தவும் இவர்களை மீண்டும் அழைத்துள்ளோம் என்று கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.