ஒட்டுக் கேட்கவில்லை! விளக்கம் அளித்த ஒபாமா

Written by vinni   // October 25, 2013   //

obamaஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்கா ஒட்டுக் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாக தகவல் கிடைத்தது, எனவே இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபென் சேய்பெர்ட் கூறியிருந்தார்.

 இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன், ஏஞ்சலா மெர்க்கல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது, உங்களுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படவில்லை, இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என ஒபாமா உறுதியளித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜாய் கார்னேய் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு தகவல்களை சேகரிக்கும் முறைகளை ஆய்வு செய்யவும் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த பிரச்சினையால் அமெரிக்கா- ஜேர்மனி இடையேயான உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டார்கள் எனவும் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.