முதலிடம் பிடித்த அம்பானி

Written by vinni   // October 25, 2013   //

ambani_002ஹரூன் இந்தியா ரிச்லிஸ்ட் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் இந்தியா ரிச் லிஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பண வீக்கம் அதிகரிப்பு காரணமாக இந்திய கோடீஸ்வரர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அந்த பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 2வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

விப்ரோ நிறுவனத்தின் அஜீம் பிரேம்ஜி 12 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 4வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ் நாடார் 8.6 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி பட்டியலில் பின்தங்கி விட்டார். அவருக்கு 11வது இடமே கிடைத்துள்ளது.


Similar posts

Comments are closed.