ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அடுத்த வாரம் வடக்கிற்கு விஜயம்

Written by vinni   // October 25, 2013   //

eu_CIஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டாலீ வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த வாரம் விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது என்பது பற்றி டாலீ நேரில் பார்வையிட உள்ளதாகக் குறி;ப்பிடப்படுகிறது.

உதவித் திட்டங்களில் நன்மை பெற்றுக் கொண்டவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வடக்கில் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வு போன்ற குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக டாலீ தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு 94 பில்லியன் ரூபாவினை உதவியாக வழங்கியுள்ளது.


Similar posts

Comments are closed.