அதிகாரம் கோத்தாவின் கைகளில், பொறுப்பு மட்டும் முதலமைச்சரிடமா? : கோத்தா நகைப்பிற்குரியவர் – சுரேஸ்பிறேமச்சந்திரன்

Written by vinni   // October 25, 2013   //

suresh-premachandranவட-கிழக்கினில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும்.அத்துடன் சர்வதேச சட்டங்களுக்கு அமைய கல்லறைகளை இடிக்க முடியாது. இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் போராளிகளுக்காவும் நினைவுச்சின்னம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகுமென கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச்செயலாளர் கோத்தா தனது கைகளினில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் எனவும் அவர் மேலும் தெரிவி;த்துள்ளார்.வடக்கினில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு என பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.


Similar posts

Comments are closed.