பீகார் மாநிலத்தில் பதுங்கியிருந்த‌9 மாவோயிஸ்டுகள் கைது

Written by vinni   // October 25, 2013   //

arrest_CIபீகார் மாநிலம் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று சிறப்பு பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த 9 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.பிடிபட்டவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டராக செயல்பட்டவன் ஷகிர் மதாரி. மற்றொரு முக்கிய தீவிரவாதி நன்கத் பஸ்வான் ஆவார்.

இதில் மதாரி மீது 25-க்கும் மேற்பட்ட கொள்ளை மற்றும் கொலை, தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவன். இவன் தலைக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.