இலங்கையில் நிரந்தர சமாதானம் தோன்ற வேண்டும் – ஐக்கிய நாடுகள் அமைப்பு

Written by vinni   // October 25, 2013   //

 54662இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரியுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல் போன்ற முனைப்புக்களுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச பிரகடனங்களிலில்  இலங்கை கைச்சாத்திட்டுள்ளதகாவும் இதன் அடிப்படையில் இலங்கையுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சுபினாய் நென்டி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.