யாழில் நிதி மோசடியினில் படை அதிகாரிகள்!

Written by vinni   // October 24, 2013   //

armyயுத்த நடவடிக்கைகளின் போது படையினர் அடாத்தாக பறித்து வைத்திருந்த தனியார் பாரவூர்திகளிற்கென ஒதுக்கி வழங்கப்பட்ட பல கோடி பணம் படை அதிகாரிகளினால் சுருட்டப்பட்ட விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருகையினில் யுத்த காலத்தில் யாழ்குடாநாட்டினில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட பெருமளவான தனியார் பாரவூர்திகளுக்கான கொடுப்பனவை இதுவரையில் இராணுவம் வழங்கவில்லையென்று தனியார் பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தினரால் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

யுத்த காலப்பகுதிகளினில்; இராணுவச்சேவைக்காக ஒரு கிழமைக்கு நான்கு பாரவூர்திகள் வீதமும் பின்னர் யுத்தம் உச்சமடைந்திருந்த நிலையினில் கிழமைக்கு 25 மேற்பட்ட பாரவூர்திகளும் இராணுவப் பாவனைக்காக அச்சுறுத்தி பறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு சுமார் 700 பாரவூர்திகள் வரையில் இராணுவப் பாவனைக்காக பெறப்பட்டிருந்தது.

எனினும் குறித்த பாரவூர்திகளிற்கு வாடகை தரப்போவதாக பலாலி இராணுவத்தலைமையகம் அறிவித்துமிருந்தது.எனினும் இன்று வரையில் கொடுப்பனவுகள் வழங்கப்படாது உள்ளன. அவற்றைப் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் கோரியுமுள்ளனர்.
இந்நிலையினில் இடம்பெற்ற விசாரணைகளினிலேயே ஒதுக்கப்பட்ட நிதியை படை உயரதிகாரிகள் சுருட்டியுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.ஏற்கனவே படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகளிற்கு வாடகை வழங்கப்போவதாக கூறி பெருமளவு பணம் படை அதிகாரிகள் மட்டத்தினில் சுரண்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.