Retina திரையுடன் கூடிய iPad Mini அறிமுகமாகியது (வீடியோ இணைப்பு)

Written by vinni   // October 24, 2013   //

ipad_mini_002அப்பிள் நிறுவனமானது Retina திரையுடன் கூடிய iPad Mini சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
7.9 அங்குல அளவு, 2048 x 1536 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இச்சாதனமானது அப்பிளின் புதிய 64-bit A7 Processor – இனை உள்ளடக்கியுள்ளது.

மேலும் இது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட iOS 7 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.2 மெகாபிக்சல்களை உடைய துணைக் கமெரா போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகமாக 16GB, 32GB 64GB மற்றும் 128GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.

இவற்றின் ஆரம்ப விலையானது 399 அமெரிக்க டொலர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.