பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் தீர்மானத்தை கமரொன் நியாயப்படுத்தினார்

Written by vinni   // October 24, 2013   //

kamaronஇலங்கையின் மனித உரிமை செயற்பாடுகளில் அதிருப்தி இருப்பினும், அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள தான் எடுத்துள்ள தீர்மானத்தை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொன் நியாயப்படுத்தினார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பகிஷ்கரிக்கக் கோரிய தொழிற்;கட்சியின் வேண்டுகோளை அவர் நிராகரித்தார்.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் கடுமையான முறையில் தன்னால் பேச முடியுமென அவர் கூறினார்.

கமரொனை சந்திப்பதற்கு வந்திருந்த நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகீ இலங்கை அரசாங்கத்துடன் மட்டுமன்றி எதிர்த்தரப்புடனும் கமரரொன் பேச வேண்டுமென கூறிய கருத்தை கமரொன் வரவேற்றார்.

இம்மாதம் வெளியிடப்பட்ட ஜக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் அறிக்கை இலங்கையில் அரசியல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணப்படவில்லையென கூறியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் சாதனையையிட்டு தனக்கு விசனம் இருப்பினும் இலங்கையின் வடபகுதிக்கும் தான் செல்லவுள்ளதாக கமரொன் கூறினார்.


Similar posts

Comments are closed.