மாநாட்டை புறக்கணிக்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Written by vinni   // October 24, 2013   //

jayalalithaகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழர்களின் உணர்வுகளை மதித்து, சிங்களர்களுக்கு இணையாக தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பன உள்ளிட்ட தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்துள்ளார்.


Similar posts

Comments are closed.