திருமணப் பந்தத்தில் இணைந்த இரு இளம் பெண்கள்

Written by vinni   // October 24, 2013   //

jaffna_girlபீகார் மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.

இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், இவர்களை பிரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆண் – பெண் காதலை போன்று அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்த இவர்கள் அக்டோபர் மாதம் 4ம் திகதி வீட்டை விட்டு வெளியேறினர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் இரு பெண்களில், ஒரு பெண்ணின் பெற்றோர் மற்றொரு பெண் வீட்டார் மீது கடத்தல் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களையும் தேடிவந்த பொலிசார் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு, விடுதி ஒன்றில் வசித்துவருவதை தெரிந்துக்கொண்டனர்.

அவர்களது செல்போனை வைத்து இவர்களை கண்டுப்பிடத்த பொலிசார் இருவரையும் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.