நண்பரையே காமுகனாக்கிய தாய்: கதறும் மகள்

Written by vinni   // October 24, 2013   //

complaint-300x300நண்பரையே காமுகனாக்கி திருமணம் செய்து வைக்க தாய் முயற்சி செய்வதாக கல்லூரி மாணவி இலவச சட்டப்பணிகள் கமிட்டி தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆஷா ஏஞ்சல்(21).இவர் தொலையா வட்டம் பகுதியில் தனியார் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வக்கீல் அசோக் என்பவருடன் குழித்துறை இலவச சட்டகமிட்டி அலுவலகத்தில் அதன் தலைவரான சார்பு நீதிபதி முருகையாவிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதில், நான் கல்லூரிக்கு சென்று வரும்போது காஞ்சாம் புரத்தை சேர்ந்த ரதீஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக தான் பழகி வந்தோம். இதை தவிர எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை.

மேலும் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதலே எனது தாய் வசந்தா(45) என் மீது அன்பு செலுத்தியதில்லை. எனது திருமணத்தை நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்.

இந்நிலையில் தான் ரதீஷ் பற்றி தெரிந்து அவருடன் ஓடிபோய் விடு என்று கூறுவார். ஒரு கட்டத்தில் அவர் என்னை கெடுத்து விட்டதாக புகார் கொடுக்க கட்டாயப்படுத்தினார்.

இதனை நான் மறுத்ததால் எனது தாய் மற்றும் 4 பேர் சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தி ரதீஷ் மீது கொல்லங்கோடு பொலிசில் புகார் கொடுக்கவைத்தனர்.

மேலும் புகார் கொடுத்த உடன் என்னை ரதீஷ் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டனர். ரதீஷ் மீது கொடுத்த புகார் பொய்யானது. அவரை நான் என்றுமே திருமணம் செய்ய விரும்பியது கிடையாது, தாய் மற்றும் 4 பேரின் நடவடிக்கையால் எனது எதிர்காலம் பாழாகி விட்டது.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது படிப்பை தொடர உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.