தொடர்ந்தும் வட மாகாணத்தில் கூடுதலான இராணுவ பிரசன்னம்

Written by vinni   // October 24, 2013   //

cmev_CIவட மாகாணத்தில் கூடுதலான இராணுவ பிரசன்னம்மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொடர்ந்தும் இடையூறாக அமைந்துள்ளது என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த வட மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலான அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராணுவப் பிரசன்னம் மக்களின் சிவில், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளில் பாதக விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெற்ற காலத்தில் படைத்தரப்பினர் அடக்குமுறைகளிலும் அச்சுறுத்தல் விடுத்தல்களிலும் ஈடுபட்டதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது.

படையினர் ஆளும் கட்சியினர் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் எதிர்க்கட்சியினரை அடக்குமுறைக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது. வடக்கு இராணுவமயப்படுத்தல்கள் தேர்தலின் நேர்மைத்தன்மைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அந்த அமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளது.

சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு உரிய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வாக்கு எண்ணும் நடவடிக்கைகளின் போது கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படாமை பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


Similar posts

Comments are closed.