இலங்கையில் பதிலின்றித் தொடரும் மனித உரிமை குற்றச்சாட்டுக்கள்

Written by vinni   // October 24, 2013   //

A Sri Lankan soldier stands guard during the resettlement of refugees to their homes in Mannarஇலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்ந்தும் பதிலளிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிபிசியின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

தாம் சந்தித்த பொதுமக்கள் இலங்கை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டதாகவும் பாலியல் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதாகவும் அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

மனித உரிமை அமைப்புகளும் அரசாங்கத்தின் மீது இது தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. எனினும் அரசாங்கம் அதனை மறுத்துவருகிறது.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சு இந்த விடயத்தில் உள்நாட்டு விசாரணைகள் போதுமானவை என்று கூறுகிறது.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதக்காலப் பகுதியே உள்ளது.

இந்தநிலையிஅரசாங்கம் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்து வருவதாகவும் பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.


Similar posts

Comments are closed.