அமெரிக்க தேசிய அகாடமியின் உயர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர் சுப்ரா சுரேஷ்

Written by vinni   // October 23, 2013   //

10-20-2010-32-indian-american-sworn-in-as-uஅமெரிக்கவாழ் இந்தியரான சுப்ரா சுரேஷ், கார்னெஜி மெல்லான் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். சென்னையில் பிறந்த சுப்ரா சுரேஷ், சென்னை ஐ.ஐ.டி.யில் கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் லோவா மாநில பல்கலைக்கழகம் மற்றும் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பு முடித்து அங்கேயே பணியாற்றி வருகிறார்.

தற்போது அவர் அமெரிக்காவின் மிக உயரிய தேசிய மருத்துவக்கல்வி நிறுவனத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். புற்றுநோய், இரத்த நோய்கள் மற்றும் மலேரியா செல்களின் இயக்கமுறைகள் பற்றிய சுப்ரா சுரேஷின் ஆராய்ச்சிக்காக தேசிய மருத்துவக் கல்வி நிறுவனம் அவருக்கு இந்த இந்த அங்கீகாரத்தை அளித்துள்ளது.

சுரேஷ் இதற்கு முன்பு தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குனராகவும், தேசிய பொறியியல் அகாடமியின் பொறுப்பிலும் இருந்துள்ளார். சுப்ரா சுரேஷ் ஒருவர் மட்டுமே, இந்த 3 தேசிய கல்வி நிறுவனங்களின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முக்கிய மூலப்பொருட்கள் பற்றிய ஆராய்ச்சி சங்கங்களின் கவுரவ உறுப்பினராகவும் சுப்ரா சுரேஷ் இருந்து வருகிறார். இதைத்தவிர, இந்தியா, பிரிட்டன், சுவீடன், ஸ்பெயின், ஜெர்மன் மற்றும் உலக கல்வி நிறுவனங்களிலும் சுப்ரா சுரேஷ் பொறுப்புகள் வகித்துள்ளார்.

அமெரிக்காவில் சிறப்பாக பணியாற்றி வரும் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சியாளர்கள் தேசியக்கல்வி கழகங்களின் பொறுப்புகளுக்காக ஒருவரை தேர்வு செய்கிறார்கள்.


Similar posts

Comments are closed.